1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 17 ஜூலை 2023 (21:35 IST)

அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர்

ponmudi
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் அவரையும் அவரது மகனையும் விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் இன்று, மற்றொரு அமைச்சரான பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டு பண பரிவர்த்தனை குறித்து விசாரணை செய்யப்பட்டது

அது மட்டும் இன்றி பொன்முடியின் வீட்டிற்கு இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் இரண்டு பேர் வருகை தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் பொன்முடி விவகாரம் குறித்து சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் ரூ.70 லட்சம் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின்றன.

இந்த நிலையில், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட 9 இடங்களில்,  13 மணி  நேர சோதனைக்குப் பிறகு,  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமலாக்கத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும், அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியும் அமலாக்கத்துறையினர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆடிட்டர் தான் பதில் சொல்வார் என்று அமைச்சர் பொன்முடி  கூறியதாகவும், தகவல் வெளியாகிறது.