1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Due to heavy rain some districts schools holiday

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

schools
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்றும் கனமழை தொடர்ந்து கொண்டிருக்கும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
நவம்பர் 4ஆம் தேதியன்று திருவள்ளூர், ஆவடி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுச்சேரி திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்