1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை எச்சரிக்கை

meteorological
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று தமிழகத்திலுள்ள 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் கன மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்!