1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Due to heavy rain some district school holiday today

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?

rain
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஒரு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் தமிழகம் முழுவதும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
63.59 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!