1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (08:07 IST)

வடகிழக்கு பருவமழை தீவிரம்: சென்னையில் விடிய விடிய கனமழை!

rain
சமீபத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ததால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 967 கனஅடியாகவும், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 66 கனஅடியாக உயர்ந்துள்ளது.
 
மேலும் சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் மழைநீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கியதால் மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு, தண்ணீர் தேங்குதல் ஆகிய புகார்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913, 044 25619206, 044 25619207 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை செயலி அல்லது டுவிட்டர் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva