கனமழை எதிரொலி: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அதேபோல் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் தஞ்சை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva