1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Driver kannan transfer to Theni

அமைச்சர் காலில் விழுந்து பணிமாறுதல் கேட்ட ஓட்டுனர்.. இரவோடு இரவக பணியிட மாற்றம்..!

அமைச்சர் சிவசங்கர்
கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்ட போது ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் அமைச்சரின் காலில் விழுந்து தன்னை பணியிட மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  
 
மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள தன்னால் முடியவில்லை என்றும் அதனால் தனது சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து கேட்டுக்கொண்டார். 
 
இதனை அடுத்து ஓட்டுனர் கண்ணன் நேற்று இரவோடு இரவாக தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.  இது குறித்த அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஓட்டுனர் கண்ணன் அமைச்சர் சிவசங்கருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அச்சம்..!