வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (13:57 IST)

சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து: அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்குவது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவதற்கு நடைமுறை என்ன? சுற்றுலா தளங்களை இணைப்பதற்கு டபுள் டக்கர் பேருந்துகளை பயன்படுத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் விரைவில் டபுள் டாக்கர் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
 
 சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படும் என்று அமைச்சரின் இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே மும்பை, டில்லி உள்ளிட்ட சில இடங்களில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva