1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (07:55 IST)

ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு தமிழ் தேர்வில் தேர்ச்சி கட்டாயம்: அதிரடி அறிவிப்பு..!

Driver Job Recruitment
தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆள் எடுக்க இருக்கும் நிலையில் இந்த பணிக்கு  தமிழில் தேர்வு  தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ’
 
ஓட்டுநர் நடத்துனர் பணிகளில் சேர இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு  சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  எழுத்து தேர்வு பொருத்தவரை பொது அறிவு, போக்குவரத்து விதிகள், மெக்கானிக் பிரிவு பிரிவில் அறிவு, வாகனம் ஓட்டும் திறன், ஆகியவை குறித்து வினாத்தாள் கேட்கப்பட வேண்டும் என்றும் அனைத்து போட்டிகளிலும் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
 
குறிப்பாக பொதுதமிழ் தேர்வுக்கு 50 மதிப்பெண், பொது அறிவுக்கு 20 மதிப்பெண், போக்குவரத்து விதி மற்றும் மெக்கானிக் பிரிவுக்கு 30 மதிப்பெண், ஓட்டுநர் திறன் தேர்வுக்கு 80 மதிப்பெண், நேர்காணலுக்கு 20 பாதிப்பெண் என்று அளவீடு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பொது தமிழ் தேர்தல் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என கருதப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓட்டுநர் நடத்துனர் பணி தமிழர்களுக்கு  அல்லது தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva