தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து 40000 ரூபாய் அபேஸ்… சிக்கிய பெண்!
- சிங்கங்களுக்கு கொரோனா; மூன்று சிங்கங்கள் கவலைக்கிடம்! – வண்டலூரில் சோகம்!
- அட்லி படத்தில் வில்லனாக நடிக்க உள்ள ஜெய்!
- எனக்கு கேப்டன்சி கிடைக்கும் என நினைத்தேன்… மனம் திறந்த யுவ்ராஜ்!
- கதாநாயகனாகும் காளி வெங்கட்… எல்லாம் இந்த படத்தால்தான்!
தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு வர ஒத்துழையுங்கள்: டாக்டர் ராமதாஸ் டுவிட்!
கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தற்போது முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தை கடைசி இடத்திற்கு கொண்டுவர தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு வர தமிழ்நாட்டு மக்களாகிய உங்களால் முடியும். உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளையும், ஊரடங்கையும் கடைபிடியுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்த உதவுங்கள்! மக்களே சிந்திப்பீர்.... செயல்படுவீர்!
தேசிய அளவிலான தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பது மிகவும் நிம்மதியளிக்கிறது. ஆனாலும், தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு தான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கேரளாவுக்கு இரண்டாவது இடம்! என்று கூறியுள்ளார்.
