1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vandalur lions critical stage in corona

சிங்கங்களுக்கு கொரோனா; மூன்று சிங்கங்கள் கவலைக்கிடம்! – வண்டலூரில் சோகம்!

Vandalur
வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் மூன்று சிங்கங்களில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் ஒரு சிங்கம் தொற்று பாதிப்பால் உயிரிழந்தது.

இந்நிலையில் மேலும் இரண்டு சிங்கங்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு சிங்கத்திற்கும் தொற்று அதிகரிப்பால் கவலைக்கிடமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை, புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு