செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (15:17 IST)

கதாநாயகனாகும் காளி வெங்கட்… எல்லாம் இந்த படத்தால்தான்!

நகைச்சுவை நடிகரான காளி வெங்கட் இப்போது கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக உருவெடுத்து வருகிறார் காளி வெங்கட். சமீபத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் இப்போது கதாநாயகனாகவும் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் மெட்ராஸ் படப்புகழ் ரித்திகா நடிக்க உள்ளாராம்.