திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (18:09 IST)

தன் தலைவரை பின்பற்றாத ஒரே கட்சி திமுக: சசிகலா புஷ்பா டுவிட்

தன்னுடைய தலைவரை பின்பற்றாத ஒரே கட்சி திமுக என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றனர். இது குறித்து சசிகலா புஷ்பா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ’முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கடைசி காலம் வரை "மத்திய அரசு" என மட்டுமே அழைத்து வந்தார். அவருக்கு இல்லாதா தமிழ்பற்றா? தெரியாத அரசியல் அமைப்பு சட்டங்களா? , தன் தலைவரை பின்பற்றாத ஒரே கட்சி திமுக - அழிவை நோக்கி! என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசு என்று பதிவு செய்ததையும் அவர் இதில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் திமுக இருந்தபோது மத்திய அரசு என்று தன் அழைத்து வந்தது என்பதும் திடீரென தற்போது ஒன்றிய அரசு என பிரிவினைவாதத்துடன் பேசுவது ஏன் என்றும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்