வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (14:30 IST)

நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம்தான் காரணம்: டாக்டர் கிருஷ்ணசாமி

நாங்குநேரியில் பட்டியலின மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என புதிய தமிழகம் பற்றி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 
 
நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என்றும் சாதிய மோதல்களை தூண்டி விட்டதால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஒரு மாணவன் ஆயுதங்களை பயன்படுத்தி சக பள்ளி மாணவனை தாக்கும் நிகழ்வு எளிதாக பார்க்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே நாங்குநேரி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த கருத்து மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது இன்று புள்ளி
 
Edited by Mahendran