திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (08:00 IST)

நாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு..மீண்டும் ஒரு அசம்பாவிதம்..!

நாங்குநேரியில்  சமீபத்தில் ஒரு மாணவரை சக மாணவர்கள்  வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே பகுதியில் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
நாங்குநேரியில்  சேர்ந்த வானுமாமலை என்பவரது வீட்டின் முன் மோடார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். அதேபோல் அவருடைய மாமனாரின் வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் கொண்டு வீசி உள்ளனர். 
இந்த இரண்டு சம்பவங்களால்  வீட்டில் உள்ள பொருட்கள் இருந்து சேதம் அடைந்தாலும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டமாக அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர் 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில்  இந்த சம்பவத்திற்கு ஆறு பேர்கள் காரணம் என்றும், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர். 
 
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான நவீன் என்பவர் உள்பட ஆறு பேரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது
 
 
Edited by Siva