திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (19:03 IST)

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்தவர் மாரடைப்பால் மரணம்.. நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்தவர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவருடைய குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர். முக ஸ்டாலின் உத்தரவு தரப்பு உள்ளார் 
 
சமீபத்தில் நாங்குநேரியில் மாணவர் ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட சக மாணவர்கள் சரமாரியாக அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இதனால் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 
இந்த நிலையில் அவருடைய குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran