திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (10:43 IST)

நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக தான் காரணம்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

நாங்குநேரியில்  நிகழ்ந்த ஜாதி பிரச்சனைக்கு திமுக ஒன்றிய செயலாளர் தான் காரணம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
என் மண் என் மக்கள் என்ற நடை பயணம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் விளாத்திகுளத்தில் அண்ணாமலை பேசினார். அப்போது  நாங்குநேரியில் நடந்த ஜாதி பிரச்சனைக்கு திமுக ஒன்றிய செயலாளர் தான் காரணம் என்று அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டார்.  
 
மேலும் தமிழக முதல்வர் ஆட்சி நடத்துவது தனது குடும்பத்திற்காக என்றும் மகன் மருமகனுக்காக தான் அவர் ஆட்சி செய்கிறார் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் மூன்றாவது முறையாக 400 எம்பிகளுடன் பிரதமராக மோடி வருவார் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழக மற்றும் புதுச்சேரியில் இருந்து 40 எம்பிக்களை நாம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva