1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (16:01 IST)

நாங்குநேரியில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு..!

நாங்குநேரியில்  பட்டியலின மாணவனை பிற சமுதாய மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு நாங்குநேரியில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக பட்டியல் இன மாணவனை அவரது வீட்டிற்கு சென்று சில மாணவர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியானது. தாக்கிய மாணவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  பட்டியல் இன மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே ஜாதி இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்த்து நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு வழிமுறைகளை வகுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran