1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dr Krishnasamy not invited from admk alliance

அதிமுகவிடம் இருந்து அழைப்பே வரவில்லை.. கடும் அப்செட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி?

krishnasamy
பாஜக கூட்டணி வேண்டாம், அதிமுக கூட்டணியில் இணைவோம் என்று முடிவு செய்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னும் அதிமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்பதை அறிந்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி, பாஜக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அதிமுக கூட்டணியில் இணைய முடிவு செய்ததாக செய்திகள் வெளியானது.

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை கேட்டு இருந்ததாகவும் ஆனால் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக தன்னை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்பதை அறிந்து அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக அழைக்காவிட்டால் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய அவர் முடிவு செய்திருப்பதாகவும் பாஜக கூட்டணியில் அவர் தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மகளிர் கல்லூரியின் 33வது விளையாட்டு விழா