புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (12:13 IST)

திமுகவுடன் உடன்பாடு இல்லையா.? அதிமுக கூட்டணிக்கு வாருங்கள்..! வைகை செல்வன்..!!

Vaigai Selvan
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக பக்கம் வரலாம் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் நல்ல முறையில்  பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இன்னும்  மூன்று நாட்களில்  நல்ல பதில் தரப்படும் எனவும் வைகை செல்வன் கூறினார்.
 
தொகுதி பங்கீடுவதில் காங்கிரஸுடன் திமுகவுக்கு கசப்பு உள்ளதாகவும், காங்கிரசுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை எனவும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தை கட்சியில் நிராகரித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் கூட நாங்கள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் எங்களுடைய டார்ச் லைட்  சின்னத்தில் தான் நிற்போம் என கூறி அடம்பிடித்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இருப்பதாகவும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
 
திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதால் பிரச்சனைக்கெல்லாம் தீர்வு விரும்பினால், அதிமுக பக்கம்  வரலாம் என அழைப்பு விடுத்தார்.

 
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பேசியதற்கு பதில் அளித்த அவர், அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம்  சொந்தம் என உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம்  கூறியிருப்பதால், இரட்டை இலை சின்னத்திற்கு யாரும் உரிமை கூற முடியாது என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார்...