திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (08:39 IST)

இந்த கூட்டணி வேண்டவே வேண்டாம்.. திருநாவுக்கரசர், ஜோதிமணி கொடுத்த ரிப்போர்ட்..!

Thirunavukkarasar
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் அதிமுக கூட்டணிக்கு செல்லலாமா என்று காங்கிரஸ் தலைமை திருநாவுக்கரசர் மற்றும் ஜோதிமணியிடம் கருத்து கேட்டதாகவும் ஆனால் அதிமுக கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று இருவரும் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நான்கு அல்லது ஐந்து தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக தரப்பு 10 தொகுதிகள் தர அழைப்பு விடுத்ததாகவும் இது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை திருநாவுக்கரசர் மற்றும் ஜோதிமணி ஆகிய இருவரிடமும் அதிமுக கூட்டணிக்கு செல்லலாமா? அவ்வாறு சென்றால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து கருத்து கேட்டுள்ளது.

இதனை அடுத்து இருவரும் அதிமுக கூட்டணிக்கு சென்றால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதி கிடைத்தாலும் அத்தனை தொகுதிகளும் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காங்கிரஸ் தலைமை திமுக கூட்டணியில் தொடர முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva