தொடர்புடைய செய்திகள்
- பா.ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு சான்று உள்ளதா ? சீமான் கேள்வி
- கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக்க எம்.ஆர்.விஜயபாஸ்கர் மும்முரம்
- 4 லட்சம் விதை பந்துகளை 8 ஆயிரம் கி.மீ தூவி விழிப்பணர்வு : மாணவ - மாணவிகள் அசத்தல்
- அதிமுகவை குறை சொல்ல திமுகவுக்கு தகுதி இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்
- சேத்துப்பட்டு அரிவாள் வெட்டு சம்பவம்- பெண் பரபரப்பு வாக்குமூலம்
தமிழகத்தில் நாளை டாக்டர்கள் வேலை நிறுத்தம்:மருத்துவ சங்கம் அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் 2 பயிற்சி டாக்டர்கள் கொடுரமாக தாக்கப்பட்டு உள்ளதை கண்டித்து தமிழகத்தில் நாளை டாக்டர்கள் வேலை நிறுத்தம்.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனையில் 2 பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா முழுவதும் கேள்விக்குள்ளாக்கப் பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து, வருகிற 17 ஆம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் 18 ஆம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு, தமிழகம் முழுவதும் மருத்துவ சேவைகள் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ சங்க (தமிழ்நாடு) மாநிலத்தலைவர் சு.கனகசபாபதி அறிவித்துள்ளார்.
மேலும் அவர், 24 மணி நேர வேலை நிறுத்தம் அறிவித்திருந்தாலும் மக்கள் நலன் கருதி, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் (emergency) மட்டும் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
