அதிமுகவை குறை சொல்ல திமுகவுக்கு தகுதி இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்

sellur raju
Last Modified சனி, 15 ஜூன் 2019 (15:27 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களிலும் அதிமுகவை நேரடியாகவே விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள பெத்தானியா பகுதியில் பேட்டரி வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டரி வாகனம் மற்றும் குப்பை தொட்டிகளை வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு “மதுரையில் பாதாள சாக்கடை கழிவுகள் குடிநீரில் கலப்பதற்கு காரணம் கழிவு நீர் குழாய்களுக்குள் கிடக்கும் நெகிழி பைகள்தான். அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து மக்களுக்கு தேவையான நீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையில் அதிமுக அரசு அலட்சியம் காட்டுவதாக சொல்வது ஆதாரமற்ற பேச்சு. அதிமுக வை விமர்சிக்கும் தகுதி திமுகவுக்கு இல்லை. ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைவேறாத திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்” என பேசியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :