வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (11:56 IST)

சேத்துப்பட்டு அரிவாள் வெட்டு சம்பவம்- பெண் பரபரப்பு வாக்குமூலம்

நேற்று இரவு சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.

சென்னை சேத்துபட்டு ரயில் நிலையத்தில் நேற்று இரவு சுரேந்தர் என்பவர் தேன்மொழி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டியுள்ளார். பிறகு தானும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். பிறகு அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேன்மொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸுக்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில் ” நானும் சுரேந்தரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். எனவே எங்கள் காதலை வீட்டில் உள்ளோர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். அதற்கு எங்கள் வீட்டில் பலமான எதிர்ப்பு இருந்தது. மேலும் என்னை இனிமேல் சுரேந்தரோடு பேசக்கூடாது என்று கட்டாயப்படுத்தினர். இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். எங்கள் காதலும் அத்தோடு முடிவுக்கு வந்தது.

பிறகு நான் சென்னையில் வேலை கிடைத்ததால் 3 மாதத்திற்கு முன்பு இங்கு வந்துவிட்டேன். அப்போது சுரேந்தர் என்னை போனில் அழைத்து நேரில் பேச வேண்டும் என்றார். அவரை சந்திக்க சேத்துப்பட்டு ரயில் நிலையம் சென்றேன். என்னுடைய நிலைமையை நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவர் புரிந்து கொள்வதாக இல்லை. திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து என்னை வெட்டிவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை” என்று தெரிவித்துள்ளார்.