திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (20:07 IST)

4 லட்சம் விதை பந்துகளை 8 ஆயிரம் கி.மீ தூவி விழிப்பணர்வு : மாணவ - மாணவிகள் அசத்தல்

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்தவர் ரவீந்திரன் – சங்கீதா ஆகியோரது முதல் பெண் மகள் ரக்ஷனா கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில்  ஏழாம் வகுப்பு படித்து விருகிறார். புவி வெப்ப மயமாதலை தடுப்பதற்காகவும், நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட வலியுரித்தி பல்வேறு வழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். 
தொடர்ந்து இன்று கன்னியாகுமரி முதல், காஷமீர் வரை 4 லட்சம் விதை பந்துகள் துவும் நிகழ்ச்சி துவங்கியது. பூமி வெப்பமயமாதலை தடுக்கவும், உலக அமைக்காவும், புவி வெப்பமயமாதலை தீர்வு காணவும், பெண் கல்வியை ஊக்கவிக்கவும், பறவை இனம் காத்தல், இயற்கை விவசாயம் மேம்படுத்துதல், குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் உள்ளட்ட 6 கோரிக்கை முன்வைத்து 8 ஆயிரம் கிலோமீட்டர் துாரம் இந்த விதை பந்து தூவி அதன் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபறெவுள்ளது.
 
ஒரு மாதம் இந்த விதை பந்து துாவுதல் விழிப்புணர்வு பிரச்சாரம் கன்னியாக்குமாரி முதல் காஷ்மீர் வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.