1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK Party Restructuring Likely Put on Hold Due to Upcoming Bypolls Decision

அடுத்தடுத்து வரும் இடைத்தேர்தல் எதிரொலி: தி.மு.க மறுசீரமைப்பு பணிகளை ஒத்திவைக்க திட்டமா?

mk stalin
தி.மு.க-வை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல உறுதியேற்றுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி அமைப்புகளில் அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், இந்த மறுசீரமைப்புப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
 
அடுத்தடுத்து மேலும் பல இடைத்தேர்தல்கள் வரவிருப்பதை சுட்டிக்காட்டி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாகக் கிடப்பில் போட சீனியர் தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இப்போது சீனியர் நிர்வாகிகளை ஓரங்கட்டினால், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் கட்சிக்குப் பெரியளவில் பின்னடைவும் சிக்கல்களும் ஏற்படும். எனவே, அனைத்து இடைத்தேர்தல்களையும் முடித்த பிறகு நிதானமாக மறுசீரமைப்பைத் தொடங்கலாம்" என முக்கிய நிர்வாகிகள் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
 
இதனிடையே, வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு எதிர்பார்த்த அளவுக்குச் சாதகமாக இருக்காது என்று உளவுத்துறை மற்றும் உள்கட்சி ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சீனியர்களின் கோரிக்கையை ஏற்று கட்சி மறுசீரமைப்பு பணிகளைத் தள்ளிப்போடலாமா என்பது குறித்துத் தலைமை தீவிரமாகச் சிந்தித்து வருகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்த வருடமாவது நோபல் பரிசு கொடுங்கள்.. அடங்காத அமெரிக்க அதிபர் டிரம்ப்..