1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK MLA Ma Subramanian tested corona positive

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

maa subramaniam
மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று:
தமிழகம் முழுவதும் கடந்த 5 மாதங்களாக கொரனோ வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட அரசியல்வாதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இதில் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சில அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது குறித்த செய்திகளை பார்த்து வந்தோம். அந்த வகையில் தற்போது சென்னை சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
மா.சுப்பிரமணியன் சென்னை நகரின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்ததை அடுத்து மா சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
அடுத்த கட்டுரையில்
60 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!