1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (19:41 IST)

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி
சென்னையில் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
 
சென்னையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஆனது. இதனை அடுத்து கோயம்பேடு சந்தை அதிரடியாக மூடப்பட்டது
 
இந்த நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. சந்தை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்