இந்தியாலேயே.. ஏன் உலகத்துலேயே.. புதிய அணியை உருவாக்கிய திமுக!

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 8 ஜனவரி 2021 (13:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தீவிர கள செயல்பாட்டில் இறங்கியுள்ள திமுக புதிய அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் திமுகவும் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் இந்திய தேர்தல்களில் வாக்களிக்க செய்ய மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது திமுக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி என்ற புதிய அணியை உருவாக்கியுள்ளது.

இந்த அணியின் செயலாளராக மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா மற்றும் இணை செயலாளராக தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :