சசிகலா விடுதலை உறுதி.. முன்னவே ரிலீஸ் ஆகலாம்! –முதல்ல இங்கதான் விசிட்?

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 8 ஜனவரி 2021 (13:13 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா விடுதலை உறுதியாகியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற அமமுக பிரமுகர் சசிகலா தனது தண்டனை காலம் முடிந்து வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 27ம் தேதி விடுதலை உறுதி என்றும் ஆனால் அதற்கு முன்னதாகவே விடுதலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலையானதும் சசிக்கலா நேரடியாக மன்னார்குடி செல்வதாகவும் அங்கு சில காலம் ஓய்வெடுத்த பிறகு அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :