திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (08:48 IST)

வரலாறு காணாத உச்சத்தை தொட போகும் பெட்ரோல், டீசல் விலை!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வரலாறு காணாத உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு போன்றவற்றால் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.96 க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல டீசல் லிட்டருக்கு ரூ.79.72 ஆக விற்பனையாகி வருகிறது.

கடந்த ஆண்டில் மற்ற ஆண்டுகளை காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இது வரலாறு காணாத உச்சத்தை தொடலாம் எனவும் கூறப்படுகிறது.