வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (20:15 IST)

கமல், ரஜினிக்கு அழைப்பு விடுத்த திமுக! வேலூர் தேர்தல் பின்னணியா?

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் ஓராண்டு நினைவுதினம் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதனை அடுத்து அன்றைய தினம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை ஒன்று திறக்கப்பட உள்ளது. இந்த சிலையை திறக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை தர உள்ளார்
 
இந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
கடந்த முறை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி மற்றும் அண்ணா சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர் அதில் கலந்து கொள்ளாமல் மதுரை சென்று விட்டார். ரஜினிகாந்த் மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த நிலையில் மீண்டும் கமல்ஹாசனுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது
 
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வேலூர் தேர்தலில் திமுகவை எதிர்த்து கமலஹாசன் போட்டியிடாததால் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருவரையும் ஒப்புக்கொள்ள செய்தால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கு விழ வாய்ப்பு உள்ளது என்ற தேர்தல் கணக்கும் இந்த விழாவில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்