ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் யாருக்கு ஜாக்பாட்? பத்த வெச்ச எஸ்.வி.சேகர்!

Last Updated: புதன், 24 ஜூலை 2019 (09:10 IST)
ரஜினி அரசியலுக்கு வருவதை கேஎஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். 
 
ரஜினி சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி சூர்யாவை ஆதரித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் எஸ்.வி.சேகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து விட்டார். விரைவில் ரஜினி அரசியலுக்கு வருவார். ரஜினியின் அரசியல் பிரெவேசத்தை காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் முக.அழகிரி நிச்சயம் விரும்புவார் என தெரிவித்துள்ளார். 
எஸ்.வி.சேகரின் இந்த பேச்சால் இரு அழகிரிகளுக்கும் என்ன பிரச்சனை? ரஜினி அரசியல் எண்ட்ரியில் அப்படி என்ன இருக்கு? என்றெல்லாம் அடுத்தடுத்த சிந்தனைகள் எழுந்துள்ளது. அதோடு ரஜினி, முக அழகிரியுடன் சேர்ந்து அரசியல் செய்யும் போது பலம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுகிறது. 

முக அழகிரின் அரசியல் அனுபவம் ரஜினிக்கு உதவும் அதேபோல் ரஜினியின் மாஸ் அழகிரியின் புகழுக்கு உதவும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :