1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (16:50 IST)

என்னைக் காப்பாற்றியவர் நடிகர் சிவக்குமார் - ரஜினி உருக்கம் ! வைரல் தகவல்

தமிழ்சினினாவில் உச்ச நடிகராக  இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். காலம் சென்ற இயக்குநர் கே. பாலச்சந்தர் அவர்களின் கண்டுபிடிப்பாக திரையுலகில் அறிமுகம் ஆனவர். பின்னர் தனது தனித்துவர் ஸ்டைல் நடிப்பால் இன்றுவரை இளம் நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்துவருகிறார் ரஜினி.
ரஜினியின் ஆரம்பகாலப் படமான புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் சிவக்குமாருக்குப் போட்டியாக நடித்து அசத்தினார்.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது :
 
நடிகர் சிவக்குமார், நான் ஸ்ரீதேவி,படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் கவிக்குயில் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நான், ஸ்ரீதேவி மற்றும் படாபட் ஆகியோருடன் பேசிகொண்டு இருப்பேன். அதைப் பார்த்த சிவக்குமார், ஏன் பெண்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறாய் என்று கோபித்து திட்டுவார். பின்னர் புவனா ஒரு கேள்விக் குறி படத்தில் நான் ஹோரோயின் சுமித்ரா கிட்ட பேசிட்டிருக்கும் போது, ஒரு உதவி இயக்குநர் என்னுடம் வந்து , இரண்டு பக்கத்துக்கு  வசனம் கொடுத்து  மாலை இந்தக் காட்சியை எடுப்போ படித்துகொள்ளுங்கள் என்றார். அதன் பிறகு சிவக்குமார் படத்தில் சீன் எதுவுமில்லை.

ஆனால் நீ நீண்ட நேரமா சுமித்ராவிடம் பேசுகொண்டிருந்தாய். யாராவது உன்னைப் பார்த்தால் உன்னை பொம்பள பொறுக்கின்னு சொல்லிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிச் செய்யச் சொன்னேன் என்று தெரிவித்தார்.
 
எனக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படி என்னை பார்த்துக்கொண்டவர் சிவக்குமார் என்று ரஜினிகாந்த் பேசி தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.