அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த் குடும்பம்!

Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (07:27 IST)
வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்து சென்றுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விரைவில் அத்திவரதரை தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் குடும்பத்தினர் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். ரஜினியின் குடும்பத்தினர்களுக்கு கோவில் நிர்வாகம் சிறப்பான வரவேற்பை அளித்து அத்திவரதரை அவர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்தனர். விரைவில் ரஜினிகாந்த் அவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :