1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK in jet mode action for Election 2021

ஸ்பீட் எடுக்கும் திமுக... தேர்தல் பணிகள் ஜரூர்!!

திமுக
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து தேர்தல் பணிகளை ஜரூராக துவங்கியுள்ளது.
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
 
இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்த குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.
 
ஐ-பேக் நிறுவனத்துடனும் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளதால் தேர்தல் பணிகள் ஜரூராக நடிப்பெற்று வருகிறது. அதிமுக இப்போது தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்துள்ள நிலையில் திமுக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
4 நாட்களுக்கு ஒரு முறை ஏவுகணை சோதனை: என்ன செய்ய காத்திருக்கு இந்தியா??