செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (08:56 IST)

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணி! – பாஜகவுக்கு சீக்ரெட் வார்னிங்!?

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி குறித்து பேச முடியும் என அதிமுக அமைச்சர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை நிலவி வந்த நிலையில் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக தரப்பிலோ கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க முடியும் என பேசி வருகிறது.

இந்நிலையில் அதிமுக தலைமை எடுத்த முடிவே தீர்க்கமானது, இறுதியானது என கூறியுள்ள அமைச்சர் கே.பி.முனுசாமி “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து பிரச்சினை இருந்து தற்பொது அது முடிந்துள்ள நிலையில், மீண்டும் அதன் மீது சர்ச்சை எழுப்புவதை அதிமுக முழுவதுமாக தவிர்க்க விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.