1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 மார்ச் 2021 (07:35 IST)

திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10 தேதி வெளியீடு – மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும், விசிகவுக்கு 6 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதியும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் கையெழுத்து ஒப்பந்தம் ஆனது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதிப்பங்கீடு பேசுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளும் 1 எம்பி சீட்டும் கேட்டு வருவதால் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து  ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது.

மேலும் திமுக வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரகடனப்படுத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.