1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (06:57 IST)

திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதியா? துரைமுருகன் பேச்சால் பரபரப்பு!

திமுக தலைவராக மு கருணாநிதி 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்த நிலையில் அவருடைய மறைவிற்கு பின்னர் திமுக தலைவராக முக ஸ்டாலின் பதவியேற்றார். தற்போது அவருடைய தலைமையில் திமுக சிறப்பாக இயங்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
வரும் தேர்தலில் முக ஸ்டாலின் வெற்றி பெற்று திமுகவை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்து விட்டால் அவர் நீண்டகாலம் தலைவராக இருப்பார் என்பது உறுதியாகிறது. இந்த நிலையில் திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்று மறைமுகமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியுள்ளார்
 
நேற்று சென்னை பெருவள்ளூர் என்ற பகுதியில் நடந்த முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பேசிய துரைமுருகன் ’நேற்று கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன், நாளை முக ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன், அதன்பின்னர் உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்’ என்று கூறியிருப்பது திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்று துரைமுருகன் மறைமுகமாக கூறியதாக தெரிகிறது