குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு: அதிமுக அரசு குறித்து மு.க.ஸ்டாலின்
குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசுதான் அதிமுக அரசு என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரி விதிக்கப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசுதான் இந்த அதிமுக அரசு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
மேலும் சென்னையில் எங்கு சென்றாலும் குப்பைகள் இருப்பதாகவும் சிங்கார சென்னையை இந்த அரசு சீரழித்து விட்டது என்று மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அதிமுக தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்