திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (07:56 IST)

68வது பிறந்த நாள்: பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு முக ஸ்டாலின் மரியாதை!

பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு முக ஸ்டாலின் மரியாதை
திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்த திமுக தலைவர் முக ஸ்டாலின் வந்த போது கெண்டை மேளம் முழங்க திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்றும் அடுத்த பிறந்த நாளை அவர் முதல்வராக கொண்டாடுவார் என்றும் அவரது கட்சியினர் 100% நம்பிக்கையுடன் உள்ளனர்