1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (12:38 IST)

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியானதால்  திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பின்னர் அதை எடுத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு புறப்பட்டு சென்ற ஸ்டாலின் அங்கு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதையை செலுத்தினார்.