செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (12:30 IST)

கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்கள் பட்டியல் வைத்து ஸ்டாலின் மரியாதை!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
அதன்படி, திமுக தனது கூட்டணியில் 12 கட்சிகளை இணைத்துக்கொண்டுள்ளது. திமுக - 174, காங்கிரஸ் - 25, சி.பி.எம் - 6, சிபிஐ - 6, விசிக - 6, மதிமுக - 6, ஐ.யூ.எம்.எல் - 3, கொ.ம.தே.க - 3, மமக - 2, த.வா.க - 1, ஆ.த.பேரவை - 1, ம.வி.க - 1 என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.  தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில் திமுக அதனை விட கூடுதலாக 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது திமுகவின் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டதையடுத்து  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் சற்று நேரத்தில் வெளியாகிறது.