செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (14:09 IST)

இன்னும் ஒரு மாசம் கூட இல்ல.. ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்காக தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் முன்னதாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் அடுத்ததாக தனது 6வது கட்ட சுற்றுப்பயண பிரச்சாரத்தை சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 12,13 ஆகிய தேதிகளில் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் கூட்டணி பங்கீடு தாமதம், தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுதாக இல்லாத நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுற்றுபயண பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.