திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

யுபிஐ பயன்படுத்தாமல் 6 மாதங்கள் ஒருவரால் சமாளிக்க முடியுமா? ராதிகாவின் உண்மைக்கதை..!

யுபிஐ பயன்படுத்தாமல் 6 மாதங்கள் ஒருவரால் சமாளிக்க முடியுமா? ராதிகாவின் உண்மைக்கதை..!
இன்று யுபிஐ வசதி இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதே கடினமாக உள்ளது. சென்னை உள்பட அனைத்து நகரங்களில் சிறு கடை முதல் சொகுசு வணிக வளாகங்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழலில், 2025-ம் ஆண்டு வரை யுபிஐ பயன்படுத்தாமல் இருந்த ரித்திகா என்ற பெண்ணின் கதை வியப்பிற்குரியது. 
 
31 வயதான மனிதவள அதிகாரியான இவர், தொழில்நுட்பத்தின் மீதான தயக்கம் காரணமாக நீண்ட காலம் ரொக்க பணத்தையே நம்பியிருந்தார்.
 
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பணம் கொடுக்க தனது தாயார் முதல் மாடியில் இருந்து பணத்தை கீழே வீச சொல்வது, நண்பர்களுடன் உணவகங்களுக்கு செல்லும்போது தனது தந்தை அல்லது சகோதரரை க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்த சொல்வது என பல சிரமங்களை அவர் சந்தித்துள்ளார். 
 
இறுதியாக, 2025 செப்டம்பரில் அவரும் யுபிஐ பயன்பாட்டிற்கு மாறினார். இப்போது டிஜிட்டல் முறையில் எளிதாக பணம் செலுத்த முடிவதால் செலவுகள் அதிகரிப்பதாகவும், அதை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் யுபிஐ பயன்பாட்டிற்கு விடுமுறை விடுவதாகவும் அவர் கூறுகிறார். 
 
டிஜிட்டல் இந்தியாவில் ஒருவரின் பழைய பாணி வாழ்க்கை முறை எவ்வாறு நவீன மாற்றத்திற்கு உள்ளானது என்பதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
 
Edited by Siva