இனி வரும் காலம் திமுகவுக்கு திக் திக் நிமிடங்கள்தான்!.. தவெக ஐடி விங் பதிவு..
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கும் போது கட்சி நிதி என்கிற பெயரில் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்த நிலையில் அன்பில் மகேஷின் முன் ஜாமின் மனு இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பில் அன்பில் மகேசை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசியல் காப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அன்பிக் மகேஷ் சட்டப்படி எதிர்கொள்வார். இது போன்ற கைது நடவடிக்கைகளால் மக்களை திசை திருப்பி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் தவெகவின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் என பதிவிடப்பட்டிருக்கிறது.