1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMDK Vijayakanth admitted in hospital

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனாவா? – மருத்துவமனையில் அனுமதி!

Tamilnadu
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில் தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்து தேமுதிகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
திமுகவில் இணைந்த எடப்பாடியார், ட்ரம்ப்!? – குழப்பத்தை உண்டாக்கிய ஆன்லைன் சேர்க்கை!