1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakanth tested positive and hospitalized

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா: சென்னை மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
விஜயகாந்தின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் ஊடகங்களில் வெளியானதையடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
உலக கொரோனா தொற்று 3.20 கோடி: 2.36 கோடி குணமடைந்தோர்!