கேட்டதை கொடுக்காத கூட்டணி!.. படியாத பேரம்!.. கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக?!...
மறைந்த நடிகர் விஜயகாந்தால் துவக்கப்பட்ட கட்சி தேமுதிக. கட்சி துவங்கியதிலிருந்து தனியாக போட்டியிடுவது, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது, மக்கள் நலக்கூட்டணி அமைப்பது என பல முடிவுகளை விஜயகாந்த் எடுத்தார். இந்த முடிவுகளுக்கு பின்னால் பிரேமலதா இருந்ததாக சொல்லப்பட்டது. விஜயகாந்த் மறைந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
ஆனால் தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என பிரேமலதா கேட்டு, அதை பாஜகவும் ஒத்துக் கொண்டது. ஆனால் சொன்னபடி ராஜ்ய சபா சீட்ட் கொடுக்கப்படவில்லை.
இந்த முறையும் அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வரும் முயற்சிகள் நடந்தது. ஆனால் இப்போது வரை அது உறுதி செய்யப்படவில்லை.. இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால், இந்த லிஸ்டில் தேமுதிக பெயர் இல்லை என்கிறார்கள்
எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகலாம் எனத்தெரிகிறது. அதேநேரம், தேர்தலுக்கு இன்னும் நேரமிருப்பதால் எதுவும் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. தேமுதிக திமுக கூட்டணிக்கு போகாது என்பதால் விஜயின் தவெக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதகாவும் சொல்லப்படுகிறது.