மயிலாப்பூர் தொகுதியில் எஸ்.வி.சேகர் போட்டியா? பாஜகவுக்கு செக் வைக்கும் திமுக?
தமிழக அரசியல் களத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் பிரபல நடிகரும், அரசியல் விமர்சகருமான எஸ்.வி.சேகர் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் 'மயிலை' வேலு மீது தொகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வேலுவுக்குப் பதிலாக, தொகுதியில் நன்கு அறிமுகமான எஸ்.வி.சேகரை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக பின்னணியைக் கொண்டிருந்த எஸ்.வி.சேகர், கடந்த சில காலமாகக் திமுக அரசின் சில செயல்பாடுகளைப் பாராட்டி வருவது கவனிக்கத்தக்கது. பிராமண வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் அவரை 'மயிலை' வேட்பாளராக நிறுத்தினால், அது பலமான போட்டியாக அமையும் என அக்கட்சி கருதுகிறது.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
Edited by Siva